ரஷ்ய நாடானது, புற்றுநோய்க்கு எதிராக mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இந்த தடுப்பூசியானது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தடுப்பூசிகள் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு தாக்குவதற்காக, நோயெதிர்ப்பு மண்டலத்தை நன்கு தூண்டுவிப்பதன் மூலம் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
mRNA வகையான தடுப்பூசிகள் தூது ஆர்என்ஏவின் ஒரு பகுதியை உடலினுள் அறிமுகப் படுத்துவதன் மூலம் செயல்படுகின்றன என்பதோடு இது ஒரு குறிப்பிட்ட புரதத்தை உற்பத்தி செய்ய செல்களைத் தூண்டுகிறது.
ரஷ்யாவில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் படிப்படியாக அதிகரித்து வருவதோடு, 2022 ஆம் ஆண்டில் 635,000 புதிய புற்றுநோய்ப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
பெருங்குடல், மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் அந்த நாட்டில் மிகவும் பெரும்பான்மையாக பதிவாகும் புற்றுநோய்ப் பாதிப்புகளாகும்.