அமெரிக்காவின் மாடெர்னா பயோடெக் நிறுவனமானது RNA அல்லது mRNA செய்தி அமைப்பைப் பயன்படுத்தி கோவிட் - 19 நோய்த் தடுப்பு மருந்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் mRNA ஆனது இதுவரை எந்தவொரு நோய்க்கும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மாடர்னா மற்றும் பிபிசர் (Pfizer) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தமது நோய்த் தடுப்பு மருந்துகளில் mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
நோய்த் தடுப்பு மருந்தை உருவாக்குவதில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவது இதுவே முதன்முறையாகும்.
mRNA என்ற புரதத்தின் வரிசையாக்கமானது கோவிட்-19 வைரஸின் முள் போன்ற ஒரு புரதத்துடன் சேர்த்து குறிமுறையாக்கப் பட்டுள்ளது.