கொடைக்கானலைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி தோட்டக்கலை வல்லுநரான M.S. வீரராகவன் ஒரு புதிய ரோஜா வகையை உருவாக்கி அதற்கு M.S. சுவாமிநாதன் ரோஜா என்று பெயரிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஊதா நிறம் கொண்ட இந்த ரோஜா வகையானது ஒரு நோய் எதிர்ப்புச் சக்தியினைக் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.
KSG சன் என்ற குழுமத்தினால் வளர்க்கப்பட்ட மற்றொரு புதிய வகை ரோஜாக்களுக்கு "மான்கொம்பு" என்று பெயரிடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு தாவரச் செடி வளர்ப்பகத்தில் வளர்க்கப்பட்ட இந்த ரோஜா வகையானது ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு நிறமுடைய புளோரிபண்டா வகை ரோஜா (floribunda rose) ஆகும்.