M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சி மையம்
August 11 , 2023 473 days 277 0
பூம்புகாரில் உள்ள M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அனைவருக்குமான மீன் விநியோகத்திற்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமானது விருது பெற்ற ஏழு திட்டங்களில் ஒன்றாகும்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை ஆகியவற்றினால் வழங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான “பெண்கள் தொடர்புச் சவால்” விருதைப் பெறுவதற்கான 260 விண்ணப்பங்களில் இதுவும் ஒன்றாகும்.
பூம்புகார் மையம் ஆனது பெண்களிடையே பாலின எண்ணிமப் பிளவைக் குறைக்கும் வகையில் தகவல், தகவல் தொடர்பு, தொழில்நுட்பச் சேவைகளை (ICT) உருவாக்கி வருகிறது.
பெண்கள் தொடர்புச் சவால் என்பது அன்றாட வாழ்வில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்குவதற்காக உலக நாடுகளுக்கு விடுக்கப் படும் ஒரு அழைப்பாகும்.
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை அறிவியலாளர் சௌமியா சுவாமி நாதன் M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.
இது அவரது தந்தையும், ஒரு புகழ்பெற்ற வேளாண் அறிவியலாளர் M.S. சுவாமிநாதன் அவர்களால் நிறுவப்பட்டது.