TNPSC Thervupettagam
October 1 , 2023 275 days 304 0
  • M.S. சுவாமிநாதன் என்று அழைக்கப்படும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் அவர்கள் சமீபத்தில் காலமானார்.
  • அவர் புகழ்பெற்ற வேளாண் அறிவியலாளர் மற்றும் நாட்டின் ‘பசுமைப் புரட்சியின்’ முக்கிய சிற்பி ஆவார்.
  • 1954 ஆம் ஆண்டில், டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் கட்டாக்கில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமாக பின்னர் மாற்றப்பட்ட மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CRRI) சேர்ந்தார்.
  • 1966 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்ற அவர் 1972 ஆம் ஆண்டு வரை அப்பதவியினை வகித்தார்.
  • அவர் வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராகவும் (1979-80), திட்ட ஆணையத்தின் தற்காலிகத் துணைத் தலைவராகவும், பின்னர் அதன் உறுப்பினராகவும் (அறிவியல் மற்றும் வேளாண்மை) (1980-82) மற்றும் பிலிப்பைன்சில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநராகவும் (1982-88) பணியாற்றினார்.
  • 2004 ஆம் ஆண்டில், அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணமான விவசாயிகளின் பல்வேறு துயரங்களைக் கண்டறிவதற்காக என்று அமைக்கப்பட்ட தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.
  • 1987 ஆம் ஆண்டில் அவருக்கு முதலாவது உலக உணவுப் பரிசு வழங்கப்பட்டது.
  • சுவாமிநாதன் அவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • அவர் H K ஃபிரோடியா விருது, லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது மற்றும் இந்திரா காந்தி பரிசு ஆகியவற்றையும் பெற்றவர் ஆவார்.
  • ரமோன் மகசேசே விருது (1971) மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது (1986) உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்