குறியீட்டு வெளியீட்டு நிறுவனமான MSCI, அதன் உலகத் தரநிலை (வளர்ந்து வரும் சந்தைகள்) குறியீட்டில் இந்தியாவின் மதிப்பினை 18.2% என்ற வரலாறு காணாத உச்சத்திற்கு உயர்த்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தக் குறியீட்டில் இந்தியாவின் மதிப்பு சுமார் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் பதிவான இந்தியாவின் தரநிலைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு உரிம வரம்பு (FOL) தான் இந்த ஏற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
MSCI நிறுவனத்தின் உலகத் தரநிலைக் குறியீட்டில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது அதிக மதிப்பினைக் கொண்டுள்ளது.