TNPSC Thervupettagam

MSME-க்களுக்கு கடன் வழங்குவதற்காக இணையதளம்

September 28 , 2018 2250 days 792 0
  • மத்திய நிதி அமைச்சகமானது சிறு குறு மற்றும் நடுத்தர (MSME – Micro, Small and Medium Enterprises) தொழில் நிறுவனங்களின் கடன்களுக்கான முதல்நிலை ஒப்புதலை ஒரு மணி நேரத்திற்குள் வங்கி கிளைக்கு செல்லாமலேயே பெறுவதற்காக ஒரு தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • www.psbloansin59minutes.com என்ற இந்த வலைப்பக்கமானது MSME-க்களுக்காக ரூ. 1 கோடி வரையிலான கடன்களுக்கான முதன்மை ஒப்புதலை 59 நிமிடங்களுக்குள்ளாகவே பெறும் வசதியை வழங்குகிறது.
  • இந்தத் தளமானது இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI – Small Industries Development Bank of India) மற்றும் 5 பொதுத்துறை வங்கிகள் (PSBs – Public Sector Banks) ஆகியவற்றிலிருந்து கடன் ஒப்புதல் பெறுவதற்கு மட்டுமேயாகும்.
  • இந்தத் தளமானது நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையின் கீழ் செயல்படுகின்ற 5 பொதுத்துறை வங்கி நிறுவனங்களின் கூட்டு முயற்சியோடு SIDBI வங்கியால் வழிநடத்தப்படுகின்ற யுக்திசார் முன்முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்