மத்திய சிறு,குறு, நடுத்தர வர்த்தக அமைச்சகம் “MSME சம்பந்த்” எனும் பொது கொள் முதல் இணையவாயிலை தொடங்கி வைத்துள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களால் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் பொது கொள்முதல் செயல்பாடுகளின் அமலாக்கத்தை கண்காணிப்பதற்காக இந்த இணையவாயில் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய பொது கொள்முதல் கொள்கையின்படி, மத்திய அரசுத் துறைகள் அல்லது மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் வருடாந்திர கொள்முதலில் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களிலிருந்து 20 சதவீதத்தினை கொள்முதல் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
வேளாண் துறைக்கு அடுத்து நாட்டில் MSME துறையே அதிக வேலைவாய்ப்பை அளிக்கின்றன. தொழிற்துறையில் வெறும் 20% முதலீடு உடைய MSME துறை 80 சதவீத வேலைவாய்ப்பைத் தருகின்றது.