மத்திய அரசு ஆனது ‘MSME நிறுவனங்களுக்கான பரஸ்பர கடன் உத்தரவாதத் திட்டம்’ என்ற திட்டத்தினை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக 2025 - 26 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம் ஆனது ஆலை, இயந்திரங்கள் அல்லது உபகரணங்களை வாங்குவதற்கு 100 கோடி ரூபாய் வரையில் கடன்களை வழங்குவதன் மூலம் MSME நிறுவனங்களுக்குப் பிணையமில்லாத கடன்களை பெற வாய்ப்பளிக்கிறது.
இந்தத் திட்டம் ஆனது தேசியக் கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனத்தின் (NCGTC) மூலம், 100 கோடி ரூபாய் வரையிலான கடன் பெறலுக்காக உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு (MLIs) 60 சதவீத உத்தரவாதக் கடன் வழங்கீட்டினை வழங்குகிறது.