குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களை (MSME) வகைப்படுத்தச் செய்வதற்கான வருவாய் மற்றும் முதலீட்டு அளவுருக்களில் சில குறிப்பிடத்தக்கத் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்பதோடு இது ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
முன்னதாக 1 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட வரம்பிலிருந்து உயர்த்தப்பட்டு, 2.5 கோடி ரூபாய் அளவு வரையிலான முதலீடுகளைக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தற்போது குறு நிறுவனங்களாக வகைப்படுத்தப்படும்.
அத்தகைய நிறுவனங்களுக்கான வருவாய் வரம்பு ஆனது 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் என்ற ஒரு வரம்பிலிருந்து இது அதிகரிக்கப் பட்டு, 25 கோடி ரூபாய் வரை முதலீடுகளைக் கொண்ட அலகுகள் ஆனது சிறு நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட உள்ளன.
அத்தகைய நிறுவனங்களுக்கான வருவாய் வரம்பு ஆனது 50 கோடி ரூபாயிலிருந்து 100 கோடி ரூபாயாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாய் என்ற வரம்பிலிருந்து உயர்த்தப் பட்டு, 125 கோடி ரூபாய் வரை முதலீடுகளைக் கொண்ட MSME நிறுவனங்கள் தற்போது நடுத்தர நிறுவனங்களாக வகைப்படுத்தப்படும்.
நடுத்தர நிறுவனங்களுக்கான வருவாய் வரம்பு 500 கோடி ரூபாயாக இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது.