TNPSC Thervupettagam

MSPக்கு 1.5 மடங்கு சூத்திரம்

December 8 , 2020 1322 days 628 0
  • பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price - MSP) தீர்மானிக்க 1.5 மடங்கு என்ற சூத்திரம் பயன்படுத்தப் படுகிறது.
  • இது 2018-19 ஆம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையின் போது அறிமுகப் படுத்தப் பட்டது.
  • இதன்படி, பயிர்களுக்கு வேண்டிய குறைந்தபட்ச ஆதரவு விலையானது அந்தப் பயிர்களுக்கான உற்பத்திச் செலவை 1.5 மடங்காக்கி ஒரு ‘முன்பே தீர்மானிக்கப்பட்ட கொள்கையாக’ நிர்ணயிக்கப் படுகிறது.
  • இதன் கீழ், விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் மட்டுமே ஒரு பருவத்திற்கான உற்பத்திச் செலவை நிர்ணயித்து இந்த சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
  • இந்த ஆணையம் கள அடிப்படையிலான எந்தவொரு செலவு மதிப்பீடுகளையும் செய்யாது.
  • ஒவ்வோர் ஆண்டும் வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் 23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைகளைப் பரிந்துரைக்கும்.
  • பருவமழைக்குப் பிந்தைய அல்லது காரீப் பருவத்தில் பயிரிடப்படும் 14 பயிர்களும், குளிர்காலம் அல்லது ராபி பருவத்தில் பயிரிடப்பட்ட ஆறு பயிர்களும் இதில் அடங்கும்.
  • ஒவ்வொருப் பயிருக்கும் மூன்று இதர வகையான உற்பத்திச் செலவுகளையும் இது கணக்கிடுகிறது.
  • அவை A2, C2 மற்றும் A2 + FL என்பவையாகும்.
  • A2 விவசாயிக்கு ஏற்படும் அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியதாகும்.
  • இதில் உரங்கள், விதைகள், பூச்சிக் கொல்லிகள், தொழிலாளர் கூலி, நீர்ப்பாசனச் செலவுகள் ஆகியவை அடங்கும்.
  • A2 + FL என்பதில், A2 என்பதின் கீழ் ஏற்படும் அனைத்துச் செலவும் மற்றும் குடும்ப உழைப்பின் மதிப்பும் அடங்கும்.
  • C2 என்பது சொந்த நிலத்தின் மீது வாடகை, வட்டிக்குச் செலவிட்டது மற்றும் நிலையான மூலதனச் சொத்துக்கள் மற்றும் A2 + FL செலவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான செலவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்