ரிசர்வ் வங்கி புத்தாக்க மையம் (RBIH) ஆனது, MuleHunter.AI செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நிதி மோசடியை எதிர்ப்பதில் மிக முன்னேற்றம் அடைந்து வருகிறது.
இது ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு செயற்கருவியாகும்.
பணமோசடி நடவடிக்கைகளுக்கு பெருமளவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் போலிக் கணக்குகளைக் கண்டறிந்து அது குறித்து அறிக்கையிடுவதில் இந்தத் தொழில்நுட்பம் நிபுணத்துவம் பெற்றது.
‘போலிக் கணக்குகள்’ என்பது குற்றவாளிகள் சட்டவிரோத நிதியைப் புழங்குவதற்குப் பயன்படுத்தும் வேறு நபர்களின் வங்கிக் கணக்குகள் ஆகும்.