TNPSC Thervupettagam

MUSE மற்றும் ஹீலியோஸ்வார்ம் ஆய்வுக் கலம்

February 13 , 2022 925 days 494 0
  • சூரியனின் இயக்கவியல், தொடர்ந்து மாறிவரும் விண்வெளிச் சூழல் மற்றும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான இணைப்பு பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதற்காக, பல்பிரிவு சூரியசக்தி ஆய்வுக் கலம் (MUSE) மற்றும் ஹீலியோ ஸ்வார்ம் ஆகிய இரண்டு அறிவியல் ஆய்வுக் கலங்களை நாசா தேர்ந்தெடுத்தது.
  • இந்த இரண்டு ஆய்வுக் கலங்களும் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவுகளை வழங்குவதோடு, விண்வெளி வீரர்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் புவியிடங்காட்டி அமைப்பு போன்ற தகவல் தொடர்பு சமிக்ஞைகளைப் பாதுகாப்பதற்கான சில முக்கியமான தகவல்களையும்  வழங்கும்.
  • இந்த ஆய்வுப் பயணங்கள் சூரிய வளிமண்டலம் மற்றும் விண்வெளி பற்றிய புதிய மற்றும் ஆழ்ந்த தகவல்களை வழங்கும்.
  • சூரியனின் கரோனா பகுதியின் வெப்பம் உண்டாக்கும் ஆற்றல் பற்றி புரிந்து கொள்வதற்கு MUSE (Multi-slit Solar Explorer) ஆய்வுக் கலம் விஞ்ஞானிகளுக்கு உதவும்.
  •  ஹீலியோஸ்வார்ம் கலம் என்பது ஒன்பது விண்கலங்களின் ஒரு தொகுதி அல்லது "திரள்" ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்