MV Sea Change எனப்படும் முழுவதும் ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் உலகின் முதல் வணிகப் பயன்பாட்டு பயணியர் படகானது, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்த படகானது வெப்பம் மற்றும் நீராவியை மட்டுமே துணை விளை பொருட்களாக உருவாக்குகிறது.
இந்தப் படகானது, ஒருமுறை நிரப்பிய எரிபொருளில் சுமார் 300 நாட்டிகல் மைல்கள் பயணித்து 16 மணி நேரத்திற்குச் செயல்படும் திறன் கொண்டது.
ஹைட்ரஜன் எரிபொருள் கலங்கள் ஆனது ஒரு மின் வேதியியல் எதிர்வினையில் ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை இணைப்பதன் மூலம் மின்சாரத்தைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றன.