மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் My MP Rojgar இணையவாயிலை தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் இணையவாயிலானது, இளைஞர்களுக்கு அவர்களது கல்வித் தகுதி, திறமைகள் மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
மேலும் இந்த இணையவாயில், வேலைவாய்ப்பு வழங்குபவர்களுக்கு தங்கள் வணிகத்தின் தேவையின் அடிப்படையில் திறனான நபர்கள் கிடைப்பதை எளிதாக்குகிறது.
இத்திட்டமானது, போபாலிலுள்ள மாதிரிப் பள்ளியில் பஹல் நிறுவனத்தால் நடத்தப்பட்ட முதலமைச்சர் வேலைவாய்ப்பு கலந்தாய்வு திட்டமான “சு லெங்கே அஸ்மானின்” (Chhu Lenge Asman) ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.
இந்த இணையவாயில் இளைஞர்களுக்கு திறன் அளிக்கும் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேச திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க வாரியத்தினால் உருவாக்கப்பட்டது.