TNPSC Thervupettagam

My NREGA செயலி – பார்மெர், ராஜஸ்தான்

February 6 , 2025 17 days 96 0
  • 2020 ஆம் ஆண்டு பணித் தொகுதியைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சித்தார்த் பழனிச்சாமி, My NREGA செயலியை உருவாக்குவதற்கான முன்னெடுப்பினை மேற்கொண்டார்.
  • இந்தச் செயலி MNREGA திட்டத்தின் பயனாளிகளாக உள்ள தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோரிக்கை செயல்முறையை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே வேலைக்கு எளிதாக விண்ணப்பிக்க வழி வகை செய்கிறது.
  • முன்னதாக, தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வேண்டி படிவம் எண் 6 என்ற படிவத்தினைச் சமர்ப்பிக்க கிராமப் பஞ்சாயத்துகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது என்பதோடு இந்தச் செயல்முறை பெரும்பாலும் தொழிலாளர்களின் மதிப்புமிக்க நேரத்தையும் முயற்சியையும் வீணடித்தது.
  • இந்தச் செயல்முறையானது பெரும்பாலும் விண்ணப்பங்கள் தவறவிடப்படுவதற்கும், கோரிக்கைகளின் திறமற்றக் கண்காணிப்பிற்கும் வழிவகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்