நகர்ப்புற நிலப் பதிவுகளை நவீனமயமாக்குவதற்காக வேண்டி தேசியப் புவியிடத் தகவல் அடிப்படையிலான நகர்ப்புற வாழ்விடங்களின் நில ஆய்வு (NAKSHA) என்ற ஒரு சோதனைத் திட்டமானது தஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் நில வளத் துறையின் எண்ணிம இந்தியா நிலப் பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டமானது மேற்கொள்ளப் படுகிறது.
நகர்ப்புற நிலப் பதிவுகள் துல்லியமாகவும் புதுப்பிக்கப்பட்டதாகவும் இருப்பதை நன்கு உறுதி செய்வதையும், நகர்ப்புறக் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், சிறந்த நகர்ப்புறத் திட்டமிடலை செயல்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட நகரங்களில் ஓராண்டிற்கு இந்த சோதனைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், புவியிட ஆய்வினை மேற்கொள்ளவும் துல்லியமான சொத்துப் பதிவுகளை உருவாக்குவதற்கும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும்.
இந்தத் தரவு ஆனது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரிப் பதிவுகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.
வரைபடங்களை உருவாக்குவதற்காக வேண்டி மேம்பட்ட நில அளவீட்டுச் சாதனங்கள் பயன்படுத்தப்படும்.