HDFC வங்கி, இந்திய இராணுவம் மற்றும் CSC அகாடமி ஆகியவை NAMAN திட்டத்தை விரிவுபடுத்த உள்ளன.
படை வீரர்களை நன்கு கௌரவிக்கும் இந்த முன்னெடுப்பானது, தற்போது 26 இந்திய இராணுவ வீரர்களின் இயக்குநரகங்களில் (DIAV) செயல்படுத்தப்பட உள்ளது.
NAMAN திட்டமானது இராணுவ வீரர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கான ஆதரவு மற்றும் சேவைகளை வழங்குவதற்காக என வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் ஆனது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப் பட்டது.
இரண்டாவது கட்டத்தில், இந்தத் திட்டம் ஆனது 26 DIAV இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.