இந்திய இராணுவம் ஆனது NAMAN திட்டத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது பாதுகாப்புத் துறை சார்ந்த ஓய்வூதியம் பெறுவோர், படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கானப் பிரத்தியேக ஆதரவு மற்றும் சேவைகளை வழங்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
NAMAN திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் 14 பொதுச் சேவை மையங்கள் நிறுவப் பட்டுள்ளன.
இதில் புது டெல்லி, ஜலந்தர், லே, டேராடூன், அகமதாபாத், பெங்களூர் மற்றும் பல இடங்கள் அடங்கும்.
இந்தத் திட்டமானது குறிப்பிட்ட பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது மற்றும் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 200 மையங்களை நிறுவுவதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.