TNPSC Thervupettagam
November 26 , 2023 237 days 170 0
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் சூரிய ஒளியில், தொழிற் சாலை கழிவுநீரில் உள்ள மிகவும் நச்சுத்தன்மை மிக்க இரசாயனங்களைத் திறம்பட்ட முறையில் சிதைக்கக் கூடிய புதிய வகை நொதி ஒப்பு போலி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் குழுவானது, தொழில் துறைப் பயன்பாட்டிற்காக தூள் வடிவமாக மாற்றப்படக் கூடிய NanoPtA எனப்படும் பிளாட்டினம் கொண்ட நுண் நொதியினை தொகுத்துள்ளது.
  • இந்த நுண் நொதி ஆனது, சூரிய ஒளியின் கீழ் வைக்கப்படும் போது சுமார் பத்து நிமிடங்களுக்குள் ஃபீனால்கள் மற்றும் சாயங்கள் போன்ற மிகவும் சிறிய அளவிலான (மைக்ரோமோலார்) கழிவுகளை கூட சிதைக்கும் என்று அக்குழு கண்டறிந்தது.
  • மேலும், NanoPtA கலவையானது, அறை வெப்பநிலையில் 75 நாட்கள் வரை நீடிக்கக் கூடிய வகையில் மிகவும் நிலையானது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்