இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் சூரிய ஒளியில், தொழிற் சாலை கழிவுநீரில் உள்ள மிகவும் நச்சுத்தன்மை மிக்க இரசாயனங்களைத் திறம்பட்ட முறையில் சிதைக்கக் கூடிய புதிய வகை நொதி ஒப்பு போலி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் குழுவானது, தொழில் துறைப் பயன்பாட்டிற்காக தூள் வடிவமாக மாற்றப்படக் கூடிய NanoPtA எனப்படும் பிளாட்டினம் கொண்ட நுண் நொதியினை தொகுத்துள்ளது.
இந்த நுண் நொதி ஆனது, சூரிய ஒளியின் கீழ் வைக்கப்படும் போது சுமார் பத்து நிமிடங்களுக்குள் ஃபீனால்கள் மற்றும் சாயங்கள் போன்ற மிகவும் சிறிய அளவிலான (மைக்ரோமோலார்) கழிவுகளை கூட சிதைக்கும் என்று அக்குழு கண்டறிந்தது.
மேலும், NanoPtA கலவையானது, அறை வெப்பநிலையில் 75 நாட்கள் வரை நீடிக்கக் கூடிய வகையில் மிகவும் நிலையானது ஆகும்.