இந்தியாவில் பாம்புக்கடித் தாக்குதலைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தேசிய செயல் திட்டம் (NAP-SE) ஆனது தொடங்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்பினைப் பாதியாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘ஒரே சுகாதாரம்’ என்ற அணுகுமுறையின் மூலம் பாம்புக்கடி நிகழ்வுகளை நிர்வகித்தல், தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கான தங்கள் சொந்த செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு பரந்தக் கட்டமைப்பை மாநிலங்களுக்கு NAPSE வழங்குகிறது.
மனிதர்கள், வனவிலங்குகள், பழங்குடியினர் மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் சுகாதாரக் கூறுகளுக்கான நடவடிக்கைகள் ஆனது அனைத்து மட்டங்களிலும் சம்பந்தப் பட்ட பங்குதாரர்களால் மேற்கொள்ளப்படும்.