மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவ்யா மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபலா ஆகியோர் இணைந்து 2030 ஆம் ஆண்டுக்குள் நாய்களால் பரவும் வெறி நாய்க்கடி நோயினை ஒழிப்பதற்கான ஒரு தேசிய செயல் திட்டத்தினை (National Action plan for Dog mediated rabies elimination by 2030 – NAPRE) வெளியிட்டனர்.
இது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தன்று வெளியிடப்பட்டது.
இந்தச் செயல்திட்டமானது 2030 ஆம் ஆண்டுக்குள் வெறிநாய்க்கடி நோயினை ஒழிப்பதற்கான ஒரு செயல்முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.