TNPSC Thervupettagam

NASA – இன்சைட் திட்டம்

April 5 , 2018 2299 days 1143 0
  • செவ்வாய் கோளின் உட்பகுதியைப் பற்றி ஆராயவும் அதன் உருவாக்கம் பற்றிய பின்புலங்களைக் கண்டுபிடிக்கவும் நாசா முதன்முறையாக செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளது.

  • செவ்வாய் கோளின் உட்பகுதியைப் பற்றி ஆராய நாசாவின் முதல் திட்டமான இன்சைட் (Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport – Insight) மே 5, 2018 அன்று விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • நிலவிற்கான நாசாவின் அப்பல்லோ திட்டத்தைத் தொடர்ந்து சீஸ்மோ மீட்டரை மற்றொரு கோளில் நிலைநிறுத்துவதற்கான திட்டமே இந்த இன்சைட் திட்டமாகும். சீஸ்மோ மீட்டர் என்பது நிலநடுக்கங்களை அளவிடும் ஒரு சாதனமாகும்.
  • அலபமா மாநிலத்தின் ஹன்ட்ஸ்வில்லேவிலுள்ள மார்ஷல் விண்வெளி ஊர்தி மையத்தால் நிர்வகிக்கப்படும், நாசாவின் கண்டுபிடிப்புத் திட்டமே இன்சைட் திட்டமாகும்.
  • இன்சைட் என்பது சீஸ்மிக் புலனாய்வு, புறப்பரப்பு (Geodesy) வெப்ப இட நகர்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி கோளின் உட்பகுதியை ஆராய்தல் ஆகும்.
  • இன்சைட், 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய செவ்வாய் கோளின் உருவாக்கத்தின் ஆரம்ப நிலையைப் (Earliest stage) பற்றிய செய்திகளை வழங்கும்.
  • இது பாறை அமைப்புகள் எவ்வாறு சூரிய குடும்பத்தின் புவி, அதன் நிலவு, மற்றும் பிற கோள்கள் ஆகியவற்றை உருவாக்கின என்பதைப் பற்றிய  குறிப்புகளை வழங்குகிறது.
  • டென்வரிலுள்ள லாக்கீட் மார்டின், விண்வெளி நிறுவனம் இன்சைட் விண்கலத்தை உருவாக்கி சோதனை செய்தது. JPL நிறுவனம், வாஷிங்டன்னிலுள்ள நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரகத்திற்கான இன்சைட் திட்டத்தை நிர்வகிக்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்