செவ்வாய் கோளின் உட்பகுதியைப் பற்றி ஆராயவும் அதன் உருவாக்கம் பற்றிய பின்புலங்களைக் கண்டுபிடிக்கவும் நாசா முதன்முறையாக செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளது.
செவ்வாய் கோளின் உட்பகுதியைப் பற்றி ஆராய நாசாவின் முதல் திட்டமான இன்சைட் (Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport – Insight) மே 5, 2018 அன்று விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவிற்கான நாசாவின் அப்பல்லோ திட்டத்தைத் தொடர்ந்து சீஸ்மோ மீட்டரை மற்றொரு கோளில் நிலைநிறுத்துவதற்கான திட்டமே இந்த இன்சைட் திட்டமாகும். சீஸ்மோ மீட்டர் என்பது நிலநடுக்கங்களை அளவிடும் ஒரு சாதனமாகும்.
அலபமா மாநிலத்தின் ஹன்ட்ஸ்வில்லேவிலுள்ள மார்ஷல் விண்வெளி ஊர்தி மையத்தால் நிர்வகிக்கப்படும், நாசாவின் கண்டுபிடிப்புத் திட்டமே இன்சைட் திட்டமாகும்.
இன்சைட் என்பது சீஸ்மிக் புலனாய்வு, புறப்பரப்பு (Geodesy) வெப்ப இட நகர்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி கோளின் உட்பகுதியை ஆராய்தல் ஆகும்.
இன்சைட், 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய செவ்வாய் கோளின் உருவாக்கத்தின் ஆரம்ப நிலையைப் (Earliest stage) பற்றிய செய்திகளை வழங்கும்.
இது பாறை அமைப்புகள் எவ்வாறு சூரிய குடும்பத்தின் புவி, அதன் நிலவு, மற்றும் பிற கோள்கள் ஆகியவற்றை உருவாக்கின என்பதைப் பற்றிய குறிப்புகளை வழங்குகிறது.
டென்வரிலுள்ள லாக்கீட் மார்டின், விண்வெளி நிறுவனம் இன்சைட் விண்கலத்தை உருவாக்கி சோதனை செய்தது. JPL நிறுவனம், வாஷிங்டன்னிலுள்ள நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரகத்திற்கான இன்சைட் திட்டத்தை நிர்வகிக்கிறது.