இடம் பெயரல் முறையினைப் (Transit method) பயன்படுத்தி வெளிக் கோள்களின் (Exoplanets) தேடலுக்காக இடம்பெயரும் வெளிக்கோள் கணக்காய்வு செயற்கைக் கோளை (Transiting Exoplanet Survey Satellite -TESS) ஏவுவதற்கு அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஏவு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் நாசா (NASA) கூட்டிணைந்துள்ளது.
இந்த செயற்கைக் கோளானது கேப் கனாவெரல் விமானப்படை நிலையத்திலிருந்து (Cape Canaveral Air Force Station) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பால்கான் 9 (Falcon 9) இராக்கெட் மூலம் 2018 ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும்.
இந்த செயற்கைக்கோள் ஆய்வானது வெளிக்கோள்கள் நம் பூமியைப் போன்று பாறையினால் ஆனதா அல்லது வியாழனைப் போல் வாயுக்களால் ஆனதா அல்லது வழக்கத்திற்கு மாறான பிற பொருட்களால் ஆனதா என்ற உண்மையை வெளிக்கொணரும்.
இடம்பெயர்தல் வெளிக்கோள் கணக்காய்வு செயற்கைக்கோளானது பூமிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள முன்னெப்போதும் பயன்படுத்தப்படாத சுற்றுவட்டப் பாதையை (Never-before-used orbit) ஆக்கிரமித்து அங்கிருந்து செயல்படும்.
இடம் பெயர்தல் வெளிக்கோள் கணக்காய்வு செயற்கைக் கோளின் முதன்மை நோக்கம், பூமிக்கு அருகில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களை (Brightest Stars) கணக்காய்வதாகும்.
இந்த செயற்கைக்கோளில் 4 பரந்த கோண தொலைநோக்கிகள் (wide-angle telescopes) பொருத்தப்பட்டுள்ளன.