TNPSC Thervupettagam
March 30 , 2018 2303 days 785 0
  • இடம் பெயரல் முறையினைப் (Transit method) பயன்படுத்தி வெளிக் கோள்களின்  (Exoplanets) தேடலுக்காக  இடம்பெயரும் வெளிக்கோள் கணக்காய்வு செயற்கைக் கோளை (Transiting Exoplanet Survey Satellite -TESS) ஏவுவதற்கு அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஏவு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்  (SpaceX)  நிறுவனத்துடன் நாசா  (NASA) கூட்டிணைந்துள்ளது.
  • இந்த செயற்கைக் கோளானது கேப் கனாவெரல் விமானப்படை நிலையத்திலிருந்து (Cape Canaveral Air Force Station) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பால்கான் 9 (Falcon 9)  இராக்கெட் மூலம் 2018 ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும்.
  • இந்த செயற்கைக்கோள் ஆய்வானது வெளிக்கோள்கள் நம் பூமியைப் போன்று பாறையினால் ஆனதா அல்லது வியாழனைப் போல் வாயுக்களால் ஆனதா அல்லது வழக்கத்திற்கு மாறான பிற பொருட்களால் ஆனதா என்ற உண்மையை வெளிக்கொணரும்.
  • இடம்பெயர்தல் வெளிக்கோள் கணக்காய்வு  செயற்கைக்கோளானது பூமிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள முன்னெப்போதும் பயன்படுத்தப்படாத சுற்றுவட்டப் பாதையை (Never-before-used orbit) ஆக்கிரமித்து அங்கிருந்து செயல்படும்.
  • இடம் பெயர்தல் வெளிக்கோள் கணக்காய்வு செயற்கைக் கோளின் முதன்மை நோக்கம், பூமிக்கு அருகில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களை (Brightest Stars) கணக்காய்வதாகும்.
  • இந்த செயற்கைக்கோளில் 4 பரந்த கோண தொலைநோக்கிகள்  (wide-angle telescopes)  பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்