TNPSC Thervupettagam

NASI - ஸ்கோபஸ் இளம் விஞ்ஞானிகள் விருது

December 2 , 2018 2185 days 667 0
  • இந்திய தேசிய அறிவியல் கழகமானது (National Academy of Sciences India-NASI) புதுடெல்லியில் 2018-ன் ஸ்கோபஸ் இளம் விஞ்ஞானிகள் விருதினை வழங்கியது.
  • இந்த ஆண்டு ஐந்து பல்வேறு பிரிவுகளில் புதிய விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • இந்த பிரிவுகள் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, சுகாதாரமான இந்தியா மற்றும் சுத்தமான இந்தியா போன்ற தேசிய திட்டங்களுடன் சார்ந்துள்ளன.
  • பன்னிரண்டாவது வருடமாக வழங்கப்படும் இந்த NASI ஸ்கோபஸ் இளம் விஞ்ஞானிகள் விருதானது கீழ்க்காண்பனவற்றின் கூட்டிணைவாகும்.
    • எல்சேவியர் மற்றும்
    • இந்திய தேசிய அறிவியல் கழகம்- NASI
  • இது இந்தியாவின் சிறந்த மற்றும் அறிவுக்கூர்மையுடைய இளம் விஞ்ஞானிகளைச் சிறப்பிக்க நடத்தப்படுகிறது
  • இந்த விருதுகள் திட்டமானது இந்தியாவில் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் எல்சேவியரின் உலகளாவிய முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
விருதுகள் வெற்றியாளர்கள்
வேளாண்மை, தாவர அறிவியல் மற்றும் கிராமப்புற மேம்பாடு Dr. ஜித்தேந்தர் கிரி (தேசிய தாவர ஜீனோம் ஆய்வு நிறுவனம், புதுடெல்லி)
உயிரி மருத்துவ ஆய்வு மற்றும் சுகாதாரம் Dr. மாத்திகா சுப்பா ரெட்டி (குழுத்தலைவர் மற்றும் அறிவியலாளர் ஊழியர் - V, CDFD ஐதராபாத்)
சுற்றுச்சூழலுக்குகந்த நீடித்த வளர்ச்சி Dr. விமல் சந்திர ஸ்ரீவஸ்தவா (IIT ரூர்க்கி)
பொறியியல் மற்றும் இயற்பியல் அறிவியலில் புத்தாக்கம் Dr. அஜய் S. காரகோடி (இணை பேராசிரியர், அகமதாபாத் பல்கலைக்கழகம், அகமதாபாத்)
அறிவியலில் பெண்கள் Dr.ஷுமர் கோஷ் (போஸ் நிறுவனம், கல்கத்தா)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்