மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர், பிரகாஷ் ஜவ்டேகர், தேசிய வாசிப்பு நாளான ஜூன் 19, 2018 அன்று இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகத்தை தொடங்கி வைத்தார்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமானது தகவல் மற்றும் தொழில்நுட்பம் வாயிலாக கல்வி பற்றிய தேசிய டிஜிட்டல் நூலக திட்டத்தை தொடங்கியது (NMECIT).
இதை ஐ.ஐ.டி. கரக்பூர் வடிவமைத்துள்ளது. தேசிய டிஜிட்டல் நூலகம் என்பது ஒற்றை சாளர மேடை மற்றும் அனைவராலும் அறிவு வளத்தை 24x7 அணுகக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தைiitkgp.ac.in மூலம் அணுக முடியும். பயன்பாட்டாளர் பதிவை உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் அணுக முடியும்.