- அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகளின் படையான நேட்டோவில் 30வது உறுப்பினராக மிகச் சிறிய நாடாகவும் முன்னாள் யுகோஸ்லேவியாவின் சிறிய ஒரு பகுதியாகவும் இருந்த மாசிடோனியாவை இணைய அனுமதிப்பதற்கு நேட்டோ உறுப்பினர்கள் மாசிடோனியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
- மாசிடோனியாவின் மீது கிரீஸ் நாட்டின் 27 ஆண்டு காலப் பிரச்சனை முடிவடைந்ததையடுத்து இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இந்த கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த ஆவணங்கள் நேட்டோ குழுவின் அமைச்சரவை நிலையிலான சந்திப்புகளில் மாசிடானியா ஒரு அழைப்பாளராக பங்கு கொள்ள அனுமதிக்கிறது.
- இந்த குழுவில் முழு உறுப்பினர் தகுதியைப் பெறுவதற்கு, தற்பொழுதுள்ள 29 நாடுகளும் இணக்கத்திற்கான நெறிமுறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு
- வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்பது (NATO - North Atlantic Treaty Organisation) வாஷிங்டன் ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இராணுவ மற்றும் அரசியல் கூட்டணியாகும்.
- நேட்டோ அமைப்பானது ஜனநாயக உரிமைகளை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இக்குழு பிரச்சனைகளைத் தீர்ப்பது, நம்பிக்கையை வளர்ப்பது, நீண்ட கால மோதலைத் தடுப்பது, பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனைகள் பற்றி உறுப்பினர்களிடையே ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்துகிறது.
- வாஷிங்டன் உடன்படிக்கையின் ஷரத்து 5-ன்படி, ஏதேனும் ஒரு உறுப்பு நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதலானது அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். மேலும் தேவை ஏற்பட்டால் உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தப்பட்ட நாட்டிற்கு உதவி செய்யும்.