TNPSC Thervupettagam

NaVIC ஐ கைபேசிகளில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது

September 24 , 2019 1891 days 1177 0
  • கைபேசி தொலைபேசிக்கான நெறிமுறைகளை உருவாக்கும் உலகளாவிய தரங்கள் அமைப்பான 3 ஜிபிபி ஆனது இந்தியாவின் பிராந்திய வழிசெலுத்தல் அமைப்பான நேவிக் (இந்திய செயற்கைக் கோள்களின் தொகுப்பு) என்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • NaVIC (Navigation with Indian Constellation) ஆனது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் உருவாக்கப்பட்டது.
  • இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு (Indian Regional Navigation Satellite System - IRNSS) அல்லது NaVIC ஆனது இந்தியா மற்றும் அதனைச் சுற்றி 1,500 கி.மீ வரையில் உள்ள பிராந்தியத்தில் பயனர்களுக்கு இடம் குறித்தத் தகவலைத் துல்லியமாக வழங்க வல்லது.
  • 3GPP ஆல் NavIC ஏற்றுக் கொள்ளப் படுதலானது 4G, 5G மற்றும் இணையங்களுக்கான பொருள்கள் (IoT) ஆகியவற்றில் NavICஐ பயன்படுத்துவதற்காக NavIC தொழில்நுட்பத்தை வணிகச் சந்தைக்கு கொண்டு வர இருக்கின்றது.
  • உற்பத்தியாளர்கள் இப்போது NaVIC உடன் இணக்கமான வழிசெலுத்தல் சாதனங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும். இதனால் இந்த சாதனங்களின் பயனர்கள் புவி இடங்காட்டி அல்லது NaVIC சமிக்கைகளை எளிதாக அணுக முடியும்.
  • 3GPP ஆனது தற்போது செல்லுலார் நிலைப்படுத்து அமைப்புகளுக்காக BDS (சீனா), கலிலியோ (ஐரோப்பா), GLONASS (ரஷ்யா) மற்றும் GPS எனப்படும் புவியிடங்காட்டி (அமெரிக்கா) ஆகியவற்றிலிருந்து உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பின் ஆதரவைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்