NaVIC ஐ கைபேசிகளில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது
September 24 , 2019 1891 days 1176 0
கைபேசி தொலைபேசிக்கான நெறிமுறைகளை உருவாக்கும் உலகளாவிய தரங்கள் அமைப்பான 3 ஜிபிபி ஆனது இந்தியாவின் பிராந்திய வழிசெலுத்தல் அமைப்பான நேவிக் (இந்திய செயற்கைக் கோள்களின் தொகுப்பு) என்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
NaVIC (Navigation with Indian Constellation) ஆனது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் உருவாக்கப்பட்டது.
இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு (Indian Regional Navigation Satellite System - IRNSS) அல்லது NaVIC ஆனது இந்தியா மற்றும் அதனைச் சுற்றி 1,500 கி.மீ வரையில் உள்ள பிராந்தியத்தில் பயனர்களுக்கு இடம் குறித்தத் தகவலைத் துல்லியமாக வழங்க வல்லது.
3GPP ஆல் NavIC ஏற்றுக் கொள்ளப் படுதலானது 4G, 5G மற்றும் இணையங்களுக்கான பொருள்கள் (IoT) ஆகியவற்றில் NavICஐ பயன்படுத்துவதற்காக NavIC தொழில்நுட்பத்தை வணிகச் சந்தைக்கு கொண்டு வர இருக்கின்றது.
உற்பத்தியாளர்கள் இப்போது NaVIC உடன் இணக்கமான வழிசெலுத்தல் சாதனங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும். இதனால் இந்த சாதனங்களின் பயனர்கள் புவி இடங்காட்டி அல்லது NaVIC சமிக்கைகளை எளிதாக அணுக முடியும்.
3GPP ஆனது தற்போது செல்லுலார் நிலைப்படுத்து அமைப்புகளுக்காக BDS (சீனா), கலிலியோ (ஐரோப்பா), GLONASS (ரஷ்யா) மற்றும் GPS எனப்படும் புவியிடங்காட்டி (அமெரிக்கா) ஆகியவற்றிலிருந்து உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பின் ஆதரவைக் கொண்டுள்ளது.