நாவிக் செய்தியிடல் அமைப்பு மற்றும் செய்தி பெறும் அமைப்பு ஆகியவற்றை இஸ்ரோ வடிவமைத்துள்ளதாக விண்வெளித் துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பானது தற்போது இந்தியத் தேசியக் கடல்சார் தகவல் மையத்தினால் (Indian National Centre for Ocean Information system - INCOIS) பயன்படுத்தப் படுகின்றது.
சுனாமி, சூறாவளி, ஆழிப் பேரலைகள் போன்ற சூழ்நிலைகளில் அவசரகால எச்சரிக்கைத் தகவல்களை ஒளிபரப்ப இந்த அமைப்பானது பயன்படுத்தப் படுகின்றது.
NAVIC என்பது ஒரு இந்தியச் செயற்கைக்கோள் தொகுப்பாகும்.
இது இஸ்ரோ அமைப்பால் உருவாக்கப்பட்ட இந்தியப் பிராந்தியக் கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைப்பு (Indian Regional Navigation Satellite System - IRNSS) ஆகும்.
இந்தச் செயற்கைக்கோள் தொகுப்பில் 8 செயற்கைக்கோள்கள் உள்ளன.
இந்தியத் துணைக் கண்டத்தில் தொடர் கண்காணிப்பை வழங்குவதே இந்த NAVICன் முக்கிய நோக்கமாகும்.