புதுடெல்லியின் விக்யான் பவனில் தேசிய தேர்வுகள் மன்றத்தின் (National Board of Examinations - NBE) 19வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பெரம்பூரில் உள்ள தென்னக ரயில்வே தலைமையக மருத்துவமனைக்கு 2014 ஆம் ஆண்டிற்கான “கல்வி நிறுவனங்களுக்கான NBE ஸ்க்ரோல் ஆஃப் ஹானர்” பிரிவின் கீழ் கேடயம் மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
உயர் மருத்துவக் கல்வி, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் மிக உயர்ந்த தரங்களை பின்பற்றுவதின் பேரில் உள்ள அதன் சிறந்த அர்ப்பணிப்பிற்காக தேசிய தேர்வுகள் மன்றத்தால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.