வங்கி சாரா நிதியியல் நிறுவனங்களுக்கான (non-banking financial companies - NBFCs) நிதி உள்ளடக்க விகித (Liquidity coverage ratio - LCR) விதிமுறைகளானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றது.
இந்திய ரிசர்வ் வங்கியானது, இதன் முந்தையக் காலக்கெடு தேதியான 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 என்ற தேதியிலிருந்து அதனை நீட்டித்துள்ளது.
10,000 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட NBFCகள் குறைந்தபட்சமாக 50% நிதி உள்ளடக்க விகிதத்தை உயர்தர நிதிச் சொத்துகளாக (HQLA - high quality liquid assets) பராமரிக்க வேண்டும்.
5000-10,000 கோடி சொத்துக்களைக் கொண்ட NBFCகள் 30% நிதி உள்ளடக்க விகிதத்தைப் பராமரிக்க வேண்டும்.
இந்த இரண்டு நிகழ்வுகளிலும், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிதி உள்ளடக்க விகிதமானது படிப்படியாக 100% ஆக உயர்த்தப்படும்.