மத்திய அரசானது, சஞ்சார் சாத்தி கைபேசி செயலி மற்றும் தேசிய அகலப்பட்டை வரிசை திட்டம் (NBM) 2.0 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது எண்ணிம பாரத் நிதியின் (DBN) கீழ் நிதியுதவி பெற்ற 4G கைபேசி தளங்களில் பல்வேறு சேவை நிறுவனங்களிடையே வலையமைப்பு பகிர்வு வசதியையும் தொடங்கி வைத்துள்ளது.
சஞ்சார் சாத்தி கைபேசி செயலி என்பது தொலைத்தொடர்பு பாதுகாப்பை மிக நன்கு வலுப்படுத்தவும் குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதற்காகவும் என வடிவமைக்கப்பட்ட ஒரு பயனருக்கு ஏற்ற வகையிலான தளமாகும்.
NBM 2.0 ஆனது 1.7 லட்சம் கிராமங்களுக்கு அகலப்பட்டை வரிசை இணைய சேவை இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னர் USOF என்று அழைக்கப்பட்ட DBN ஆனது, அதன் விரிவான கைபேசி அலைபரப்பு கோபுர அமைப்புத் திட்டங்கள் மூலம் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் தொலைத்தொடர்பு இடைவெளியைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
DBN 4G தளங்கள் ஆனது பயனர்கள் பல தொலைத்தொடர்பு வழங்குநர்களிடமிருந்து (BSNL, Airtel, Reliance) 4G சேவைகளை அணுக அனுமதிக்கிறது.