TNPSC Thervupettagam

NBSAP கண்காணிப்பு அமைப்பு

October 9 , 2024 14 hrs 0 min 48 0
  • இயற்கைக்கான உலக வனவிலங்கு நிதியமானது (WWF) தேசியப் பல்லுயிர்ப்பெருக்க உத்தி மற்றும் செயல் திட்டங்கள் கண்காணிப்பு (NBSAP) எனப்படும் ஒரு புதிய செயற் கருவியினை உருவாக்கியுள்ளது.
  • உலகளாவியப் பல்லுயிர் பெருக்கக் கட்டமைப்பின் (GBF) இலக்குகளுடன் நன்கு ஒன்றி போகும் தங்கள் NBSAP அமைப்புகளை மேம்படுத்துவதில் அந்த நாடுகளின் மீதான முன்னேற்றத்தை இது கண்காணித்து வருகிறது.
  • உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்கக் கட்டமைப்பை ஏற்பது என்பது 196 நாடுகளின் முக்கியமான உறுதிப்பாடாகும்.
  • 10 சதவீத நாடுகள் மட்டுமே பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான சில உறுதி மொழிகளை நிறைவேற்றியுள்ளன.
  • தற்போது, ​​15வது பங்குதாரர்கள் மாநாட்டிலிருந்து (COP15) 20 நாடுகள் மட்டுமே தங்கள் NBSAPகளை முழுமையாகத் திருத்தியமைத்துள்ளன.
  • 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திய நிலவரப்படி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒன்பது நாடுகள் மட்டுமே இந்த மேம்படுத்தப்பட்ட திட்டங்களைச் சமர்ப்பித்துள்ளன.
  • இதன் மூலம் இந்தியா உட்பட 186 நாடுகள் இன்னமும் தனது திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
  • குன்மிங்-மாண்ட்ரியல் உலகப் பல்லுயிர்ப் பெருக்கக் கட்டமைப்பு (GBF) ஆனது 2022 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்