NCAER மாநில முதலீட்டு திறன் குறியீட்டில் தமிழ்நாடு பின்னடைவு (N-SIPI 2017)
July 21 , 2017 2681 days 1079 0
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு (2017) மாநில முதலீட்டு திறன் குறியீட்டில் (State Investment Potential Index )தமிழ்நாடு மூன்று இடங்கள் சரிந்து ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
முதல் மூன்று இடங்களில் இருந்துவந்த தமிழகம், அந்த அங்கீகாரத்தை இம்முறை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது . நில மற்றும் தொழிலாளர் விவகாரம் ; உள்கட்டமைப்பு , பொருளாதாரம் மற்றும் நிர்வாக சிக்கல்களை தாங்கள் பெருமளவு சந்திப்பதாக கணக்கெடுப்பில் பங்குபெற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
செயல்முறை பொருளியல் ஆராய்ச்சிக்கான தேசிய குழுவானது (National Council of Applied Economic Research, NCAER) மாநிலங்களின் தொழில்சார்ந்த போட்டித்திறனை ஆறு காரணிகளை கொண்டு மதிப்பிடும். அவை நிலம் , தொழிலாளர் , உள்கட்டமைப்பு , பொருளாதார சூழ்நிலை , அரசியல் நிலைத்தன்மை மற்றும் அரசாளுமை , மற்றும் வணிகக் கண்ணோட்டம்.
2016 இல் தமிழ்நாடு 6 இடங்கள் வீழ்ச்சி அடைந்து 18வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு , தொழில்துறைக் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையும் (Department of Industrial Policy and Promotion, DIPP) , உலக வங்கியும் இணைந்து வெளியிட்ட வணிக சீர்திருத்தங்கள் தரவரிசையில் (business reforms rankings ), தமிழ்நாடு 18 ஆவது இடத்தை பிடித்துள்ளது . இது வளர்ச்சியடைந்த மாநிலங்களில் கடைசி இடம் ஆகும் . நாட்டின் அந்நிய நேரடி முதலீட்டில் (Foreign Direct Investment, FDI) தமிழ்நாட்டின் பங்கு 9 சதவீதமாக குறைந்துள்ளது , 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பங்கு 1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016 இல் தமிழ்நாடு 6 இடங்கள் வீழ்ச்சி அடைந்து 18வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு , தொழில்துறைக் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையும் (Department of Industrial Policy and Promotion, DIPP) , உலக வங்கியும் இணைந்து வெளியிட்ட வணிக சீர்திருத்தங்கள் தரவரிசையில் (business reforms rankings ), தமிழ்நாடு 18 ஆவது இடத்தை பிடித்துள்ளது .
இது வளர்ச்சியடைந்த மாநிலங்களில் கடைசி இடம் ஆகும் . நாட்டின் அந்நிய நேரடி முதலீட்டில் (Foreign Direct Investment, FDI) தமிழ்நாட்டின் பங்கு 9 சதவீதமாக குறைந்துள்ளது , 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பங்கு 13.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய கவுன்சில் செயல் முறை சார்ந்த பொருளாதார ஆராய்ச்சி (NCAER)
NCAER இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய சுயாதீன, இலாப, பொருளாதார கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இக் குழுவின் தலைவர் நந்தன் நீலேக்கனி ஆவார். டாக்டர் சேகர் ஷா தற்போது NCAER இன் இயக்குநர் ஜெனரலாக உள்ளார்.
இந்த நிறுவனம் 1956 ஆம் ஆண்டு போர்டு நிறுவனம், நிதி அமைச்சகம் மற்றும் டாடா சன்ஸ் ஆகியவற்றின் பண உதவியுடன் தொடங்கப்பட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேரு அக்டோபர் 31, 1959 ஆம் ஆண்டு தேசிய கவுன்சில் செயல் முறை சார்ந்த பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டினார்.