மாநிலத்தில் திறனான நிர்வாகத்தை செயல்படுத்துவதற்காக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள் அமராவதியில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அதிகாரப்பூர்வ NCBN (Nara Chandrababu Naidu) செயலியை தொடங்கி வைத்தார்.
இந்த கைப்பேசி செயலியானது உண்மைநேர செய்திகளை (Real time news) உடனுக்குடன் மக்களுக்கு வழங்குவதுடன், சாதாரண மக்கள் அரசுடன் தொடர்பு கொள்ளவும் (To interact with government) வழிவகை செய்யும் ஒரு நேரடி தளமாகவும் (Direct platform) செயல்படுகிறது.