TNPSC Thervupettagam
June 2 , 2018 2372 days 735 0
  • உச்ச நீதி மன்ற நீதிபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியான நீதிபதி K.அகர்வால் தேசிய நுகர்வோர் விவகாரங்களுக்கான குறைதீர்ப்பு ஆணையத்தின் (National Consumer Disputes Redressal Commission - NCDRC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வாலை இந்த ஆணையத்தின் தலைவராக நியமிப்பதற்கு அனுமதியளித்துள்ளது.
  • மே 31ஆம் தேதியன்று தனது பதவிக் காலத்தை முடிக்கும் நீதிபதிK.ஜெயினுக்குப் பதிலாக இவர் தனது பணியை தொடர்வார்.
  • NCDRC என்பது நுகர்வோர்களின் குறைகளை தீர்ப்பதற்கான பகுதி நீதித்துறை அமைப்பாகும்.
  • 1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.
  • இந்த ஆணையம் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற அல்லது நடப்பில் உள்ள நீதிபதியால் தலைமை தாங்கப்படும்.
  • ஒரு கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான பொருட்கள் மற்றும் சேவைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு நபரும் குறை தீர்ப்பு விவகாரத்திற்காக இந்த ஆணையத்தை அணுக முடியும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்