உச்ச நீதி மன்ற நீதிபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியான நீதிபதி K.அகர்வால் தேசிய நுகர்வோர் விவகாரங்களுக்கான குறைதீர்ப்பு ஆணையத்தின் (National Consumer Disputes Redressal Commission - NCDRC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வாலை இந்த ஆணையத்தின் தலைவராக நியமிப்பதற்கு அனுமதியளித்துள்ளது.
மே 31ஆம் தேதியன்று தனது பதவிக் காலத்தை முடிக்கும் நீதிபதிK.ஜெயினுக்குப் பதிலாக இவர் தனது பணியை தொடர்வார்.
NCDRC என்பது நுகர்வோர்களின் குறைகளை தீர்ப்பதற்கான பகுதி நீதித்துறை அமைப்பாகும்.
1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.
இந்த ஆணையம் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற அல்லது நடப்பில் உள்ள நீதிபதியால் தலைமை தாங்கப்படும்.
ஒரு கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான பொருட்கள் மற்றும் சேவைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு நபரும் குறை தீர்ப்பு விவகாரத்திற்காக இந்த ஆணையத்தை அணுக முடியும்.