TNPSC Thervupettagam
December 8 , 2017 2573 days 824 0
  • 50-% காட்டிலும் குறைவாக இந்து சமூகத்தினரின் மக்கள் தொகையுடைய   8 மாநிலங்களில், இந்து சமூகத்தினருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்தினை தருவது தொடர்பான ஆய்வினிற்கு மூன்று பேர் கொண்ட குழுவை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் [NCM – National Commission for Minorities] அமைத்துள்ளது.
  • இக்குழுவின் தலைவராக NCM-ன் துணை தலைவர் ஜார்ஜ் குரியன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் உதவித்துணைக்காக NCM-ன் கூடுதல் செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இக்குழு மூன்று மாதங்களில் தங்களின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 8 மாநிலங்களில் இந்து சமூகத்தினர் சிறுபான்மையினராக உள்ளனர்.
அவையாவன: லட்சத்தீவுகள், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, ஜம்மு & காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் பஞ்சாப்.
  • மாநிலத்தின் மக்கள் தொகையில் குறைந்த எண்ணிக்கையுடைய இந்து சமூகத்தினரை, தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992-ன் பிரிவு 2-ன் கீழ் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ சிறுபான்மையினராக அறிவிக்காமல் உள்ளதன் காரணமாக அரசியலமைப்பு சட்டம் விதி 25 முதல் 30 வரை உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை இழந்த நிலையில்   இந்த 8 மாநில இந்து சமூகத்தினர் உள்ளனர்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்