TNPSC Thervupettagam
April 12 , 2020 1691 days 600 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆனது கோவிட் – 19 சோதனை உபகரணத்தை மேம்படுத்துவதற்காக சுகாதார நல புத்தாக்க (ஸ்டார்ட் அப்) நிறுவனமான புத்தாக்க தொகுதிகள் என்ற நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்து உள்ளது.
  • இந்தச் சோதனை உபகரணத்தின் முக்கிய நோக்கம் சோதனையை மிக விரைவாக 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மேற்கொள்வதாகும்.
  • இந்த சாதனமானது மனித உடலில் கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கு எதிராக உற்பத்தி செய்யப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்திகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு சோதனையாகும்.
  • மனித உடலானது நோய் எதிர்ப்புப் புரதம் ஜி மற்றும் நோய் எதிர்ப்புப் புரதம் எம் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது. இங்கு வைரஸ் ஆனது தனது தொற்றைத் தொடங்குகின்றது.
  • இந்த நோய் எதிர்ப்புச் சக்திகள் வைரஸின் முள் புரதங்களுக்கு (spike proteins) எதிராக தாக்குதலை தொடங்குகின்றன.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றின் தற்போதைய சோதனை முறையான நிகழ்நேர தலைகீழ் பல்படிமத் தொடர் வினைச் சோதனைக்கு அதிகப்படியான மனித ஆற்றல் தேவைப்படுகின்றது. இச்சோதனையானது அதிக காலம் எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்