TNPSC Thervupettagam

NCSK க்கான புதிய இணையதளம் மற்றும் கைபேசி செயலி

April 14 , 2018 2416 days 777 0
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையத்திற்காக (National Commission for Safai karamcharis – NCSK) புதிய இணையதளம் மற்றும் கைபேசி செயலியைத் தொடங்கியுள்ளது.
  • இந்த செயலி, மனுதாரரின் குறைகளை திறனான வகையில் களைவதற்கு ஆணையத்திற்கு உதவிபுரியும்.
  • இந்த ஆணையம், 1993 ஆம் ஆண்டின் மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணைய சட்டத்தின் கீழ் (National Commission for Safai Karamcharis Act, 1993) அமைக்கப்பட்ட ஒரு சட்ட அமைப்பாகும்.
  • மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக NCSK ஆனது 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஒரு தலைவரையும், நான்கு உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.
  • இவ்வாணையம் மனிதக்கழிவுகளை அகற்றுவோரின் நலன் மற்றும் உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்