மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையத்திற்காக (National Commission for Safai karamcharis – NCSK) புதிய இணையதளம் மற்றும் கைபேசி செயலியைத் தொடங்கியுள்ளது.
இந்த செயலி, மனுதாரரின் குறைகளை திறனான வகையில் களைவதற்கு ஆணையத்திற்கு உதவிபுரியும்.
இந்த ஆணையம், 1993 ஆம் ஆண்டின் மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணைய சட்டத்தின் கீழ் (National Commission for Safai Karamcharis Act, 1993) அமைக்கப்பட்ட ஒரு சட்ட அமைப்பாகும்.
மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக NCSK ஆனது 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஒரு தலைவரையும், நான்கு உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.
இவ்வாணையம் மனிதக்கழிவுகளை அகற்றுவோரின் நலன் மற்றும் உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.