மாபெரும் சமூக ஊடக அமைப்பான முகநூல் நிறுவனமானது சைபர் அமைதி அறக்கட்டளையோடு (Cyber Peace Foundation - CPF) இணைந்து டிஜிட்டல் கற்றல் திட்டத்தினை (digital literacy programme) துவங்க தேசிய பெண்கள் ஆணையத்தோடு (National Commission for Women - NCW) ஓர் கூட்டிணைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்த சோதனை டிஜிட்டல் கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஓர் ஆண்டுகாலத்திற்கு ஹரியானா, டெல்லி-தேசிய தலைநகர் பகுதி, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் 60000 பெண்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படும்.