ஜூலை 18, 2018 அன்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கேசினேனி ஸ்ரீநிவாஸ் தேசிய ஜனநாக கூட்டணி கட்சி (National Democratic Alliance - NDA) அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டு வந்தார்.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இத்தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டு விவாதம் மற்றும் வாக்களிப்பதற்காக ஜூலை 20, 2018 தேதியினை அறிவித்தார்.
சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை 26 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆச்சார்யா கிருபாளினி, இந்தியா-சீனா போருக்கு பிறகு உடனுக்குடன் ஆகஸ்ட், 1963ல் முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டு வந்தார்.
பிரதம மந்திரியாக இந்திரா காந்தி அவர்கள் பெரும் அளவிலான நம்பிக்கையில்லா தீர்மானங்களை சந்தித்துள்ளார். அவை மொத்தம் 15 ஆகும்.
ஜூலை 1979-ல் நடந்த விவாதத்தில் பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் பதவி விலகியதைத் தவிர கொண்டு வரப்பட்ட எல்லா நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டன.
பாராளுமன்ற வரலாற்றில் 27வது முறையாக, 15 வருடத்தில் முதல் முறையாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவாகும்.
கடைசி நம்பிக்கையில்லா தீர்மானம், பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு எதிராக 2003-ல் கொண்டு வரப்பட்டதாகும்.