TNPSC Thervupettagam

NDA அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்

July 22 , 2018 2322 days 714 0
  • ஜூலை 18, 2018 அன்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கேசினேனி ஸ்ரீநிவாஸ் தேசிய ஜனநாக கூட்டணி கட்சி (National Democratic Alliance - NDA) அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டு வந்தார்.
  • மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இத்தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டு விவாதம் மற்றும் வாக்களிப்பதற்காக ஜூலை 20, 2018 தேதியினை அறிவித்தார்.
  • சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை 26 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • ஆச்சார்யா கிருபாளினி, இந்தியா-சீனா போருக்கு பிறகு உடனுக்குடன் ஆகஸ்ட், 1963ல் முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டு வந்தார்.
  • பிரதம மந்திரியாக இந்திரா காந்தி அவர்கள் பெரும் அளவிலான நம்பிக்கையில்லா தீர்மானங்களை சந்தித்துள்ளார். அவை மொத்தம் 15 ஆகும்.
  • ஜூலை 1979-ல் நடந்த விவாதத்தில் பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் பதவி விலகியதைத் தவிர கொண்டு வரப்பட்ட எல்லா நம்பிக்கையில்லா தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டன.
  • பாராளுமன்ற வரலாற்றில் 27வது முறையாக, 15 வருடத்தில் முதல் முறையாக கொண்டு வரப்பட்ட  நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவாகும்.
  • கடைசி நம்பிக்கையில்லா தீர்மானம், பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு எதிராக 2003-ல் கொண்டு வரப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்