TNPSC Thervupettagam

NDRF எழுச்சி தினம் - ஜனவரி 19

January 24 , 2025 86 days 104 0
  • தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆனது 2006 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • யோகோஹாமா உத்தித் திட்டம் (1994) மற்றும் ஹியோகோ செயல்திட்டத்தினால் (2005) தூண்டப்பட்டு, பேரிடர் மீட்பு மற்றும் தயார்நிலை என்ற ஒரு கருத்தாக்கம் மிகவும் தீவிரம் அடைந்தது.
  • இந்தக் காலகட்டமானது, இந்தியாவில் ஒரிசா அதி தீவிரப் புயல் (1999), குஜராத் நில நடுக்கம் (2001) மற்றும் இந்தியப் பெருங்கடல் சுனாமி (2004) உள்ளிட்ட கடுமையான இயற்கைப் பேரிடர்களின் தொடர்ச்சியான பாதிப்புகளுடன் ஒத்துப்போனது.
  • பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆனது 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியன்று இயற்றப்பட்டது.
  • இது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தினை (NDMA) நிறுவ வழிவகுத்தது.
  • இது பேரிடர் மேலாண்மைக்கான பல்வேறு கொள்கைகள், அதன் திட்டங்கள் மற்றும் அதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணியைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்