இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தினால் பதிவு செய்யப்பட்ட வங்கி சாராத தரகுப் பேச்சுவார்த்தை சார்ந்த -கொள்முதல் பொருத்த (NDS-OM) தளத்தினை அணுகுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதிக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கியினால் இயக்கப்படும் இந்த NDS-OM தளம் ஆனது, அரசாங்கப் பத்திரங்களில் (G-Secs) இரண்டாம் நிலை சந்தை வர்த்தகத்திற்காக என ஒரு பெயர் அறியப் படாத கொள்முதல் பொருத்த அமைப்பாகும்.
தற்போது, இந்த NDS-OM அமைப்பிலான உறுப்பினர் சேர்க்கையானது, இந்திய ரிசர்வ் வங்கியில் அரசுப் பத்திரப் பரிமாற்றங்களுக்கான கணக்குகளைப் பேணும் வங்கிகள், முதன்மை ஒப்பந்ததாரர்கள், முக்கியக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சில பரஸ்பர நிதிகள் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.